வாக்குப்பெட்டித் திருவிழாஇதோ
மணியடித்துவிட்டது
நாடகம் தொடங்கப்போகிறது
அவசர அவசரமாய்
அதாரம் பூசுகிறார்கள் எல்லாரும்
பழைய வசனங்களையே
திரும்பத் திரும்ப மனனம் செய்கிறார்கள் சிலர்
நடிகர்களின் முகவர்கள்
பார்வையாளர்களிடம்
காசுகொடுத்துவிட்டு
டிக்கெட் வாங்கக் காத்திருக்கிறார்கள்
இறந்துவிட்டார்கள்
இந்த நெரிசலில் சிலர்

நாளை
திரைவிழும்
எல்லாரும் கலைந்துவிடுவார்கள்
யாருமற்று வெறிச்சோடும் அரங்கம்

மேடை மீது செத்துக்கிடக்கும்
கதைத்தலைமையைத் தவிர்த்து

Comments

Post a Comment