கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவையு"ம் கலையில்லை; அவை வெறும் பரப்புரைகள்” என்று இடையறாது சொல்லிவந்த வெங்கட்சாமிநாதன், இடதுசாரி மேடையொன்றில் அரங்கேறிக்கொண்டிருந்த கலைநிகழ்ச்சிகளை வறுத்த நிலக்கடலையை கொரித்தவாறே கவனித்துக்கொண்டு இருந்தார். அங்கு அரங்கேறிய சில நிகழ்வுகள் அவரின் கருத்திற்கு வலுச்சேர்ப்பனவாக இருந்தன. அவர் சலிப்படைந்து, ‘சரி கிளம்பலாம்’ என எண்ணியபொழுது கறுத்த, குள்ளமான, ஒல்லியான 25வயதே மதிக்கத்தக்க, நகரத்துப் பகட்டுகள் எதுவுமில்லாத இளைஞர் ஒருவர் மேடையேறி ஒலிவாங்கியை எடுத்து பாடத்தொடங்கினார். கணீரென்ற அவரது குரலொலியும் பாடலும் இசையும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமான வெ.சா.வின் செவியைப்பிடித்து இழுத்து நிறுத்தின. கையிலிருந்த நிலக்கடலை தீர்ந்த பின்னரும் அவர் அங்கேயே நின்று அந்த இளைஞரின் இசைக்கடலுக்குள் மூழ்கிப்போனார். அந்த இசைக்குள் பொதிந்துவந்த ஆதிக்க எதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோர் எழுச்சி ஆகிய பாடுபொருள்கள் வலதுசாரியான வெ.சா.வுக்கு உவப்பானதாக இருந்திருக்காது; ஆனாலும் அவரால் அ