சாலையோரத்தில் இருக்கும் வீட்டில் உள்ளவர்களைக் காப்பதாகக் கூறி அ என்னும் ஒருவர் அவ்வீட்டிற்குள் புகுந்தார். அவரின் எதிரியான ஆ. அ என்பவரை விரட்டுவதற்காக, அந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த இ என்பவருக்கு துப்பாக்கி ஒன்றைக் கொடுத்தார். இயும் அந்தத் தூப்பாக்கியைக் கொண்டு அவிடம் சண்டை போட்டார்.
ஒரு நாள் அ அந்த வீட்டிலிருந்து வெளியேறினார். அப்பொழுதுதான் இக்கு தன் வீட்டிலும் பக்கத்து வீடுகளிலும் இருக்கும் புதையலைக் கவரவே ஆ தன்னைப் பயன்படுத்தியுள்ளார் என்பது புரிந்தது. எனவே ஆ கொடுத்த துப்பாக்கியை அவருக்கு எதிராக இ திருப்பினார். ஆவுக்கும் இக்கும் சண்டைகள் நடந்தன. அந்த ஊரில் தான் மட்டுமே பெரிய பலசாலி என முண்டா தட்டிய ஆவின் முகத்தில், எதிர்பாராத வேளையில் இ ஓங்கி ஒரு குத்துவிட்டு ஆவின் மூக்கை உடைத்துவிட்டார். பின்னர் பக்கத்துத் தெருவிலிருந்த ஈயின் வீட்டிற்குப் போய் இ பதுங்கிக் கொண்டார்.
ஈ. ஆவுக்கு நண்பர்தான் என்றாலும் அவர் இயை ஆவுக்குக் காட்டிக்கொடுக்கவில்லை. ஆனால், ஈயின் வீட்டில் இ பதுங்கி இருப்பதை மோப்பம் பிடித்த ஆ, ஈக்குத் தெரியாமல் அவரது வீட்டிற்குள் புகுந்து இயைக் கொன்றுவிட்டார்.
இப்பொழுது சொல்லுங்கள், உண்மையில் யார் தீயன்? (Villan)
Showing posts with label உருவகக்கதை. Show all posts
Showing posts with label உருவகக்கதை. Show all posts
Subscribe to:
Posts (Atom)
நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்
யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...
-
இன்றைக்கு சுஜாதாவிற்கு நினைவுநாளாம். யாரோ ஒரு நண்பர் என்னையும் சுஜாதாவின் புகழ்பாடும் “ எழுத்தாளர் சுஜாதாவின் விசிறிகள் குழு ” என்னும் முக...
-
சின்னையில் பிறந்து, வதிலையில் வளர்ந்து, மதுரையில் பயின்று, சென்னையில் சிறந்தவர் சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா. இவர் மதுரை ...
-
தேனி வரசக்தி விநாயகர் கோவிலில் ஒவ்வோராண்டும் நவராத்திரி கலை இலக்கிய விழாவாகக் கொண்டாடப்படும். இவ்விழாவிற்கு கவிஞர் கண்ணதாசன் ஒருமுறை வந்திர...