மீதம்

எனது
சிறகுகள் வெட்டப்பட்டுள்ளன
கால்கள் கட்டப்பட்டுள்ளன
அலகுகள் மழுக்கப்பட்டுள்ளன
கண்கள் குருடாக்கப்பட்டுள்ளன
கூடு கலைக்கப்பட்டுள்ளது
எனினுமென்ன?
உயிரும் உறுதியும்
மீதமிருக்கின்றனவே
இடையறாது பறப்பதற்கு

வாக்குப்பெட்டித் திருவிழா



இதோ
மணியடித்துவிட்டது
நாடகம் தொடங்கப்போகிறது
அவசர அவசரமாய்
அதாரம் பூசுகிறார்கள் எல்லாரும்
பழைய வசனங்களையே
திரும்பத் திரும்ப மனனம் செய்கிறார்கள் சிலர்
நடிகர்களின் முகவர்கள்
பார்வையாளர்களிடம்
காசுகொடுத்துவிட்டு
டிக்கெட் வாங்கக் காத்திருக்கிறார்கள்
இறந்துவிட்டார்கள்
இந்த நெரிசலில் சிலர்

நாளை
திரைவிழும்
எல்லாரும் கலைந்துவிடுவார்கள்
யாருமற்று வெறிச்சோடும் அரங்கம்

மேடை மீது செத்துக்கிடக்கும்
கதைத்தலைமையைத் தவிர்த்து

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...