முதிர்ச்சி

உடலின் முதிர்ச்சி முதுமை
அறிவின் முதிர்ச்சி புலமை
அன்பின் முதிர்ச்சி காதல்
மனதின் முதிர்ச்சி ஞானம்
எதன் முதிர்ச்சி நாம்?

Comments

 1. முதலில் இந்தக் கவிதைக்கு என் ஆதரவையும் விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!! நல்ல வரிகள் ..நம்மிடம் நமக்கு எது நிரம்பப் பிடிக்குமோ அதன் முதிர்ச்சி தான் நாமும்... ஒவ்வொருவரும் சனத் தொகையின் முதிர்ச்சி .. உள்ளூர சென்று பார்க்கும் வேலையில் சொற்பமான சில மனிதர்கள் மட்டுமே அன்பின் முதிர்ச்சி ... மற்றவரின் தவறுகளிலும்.... ஏன் ? தன்னுடைய தவறுகளையே ஒத்துக்கொள்ள முடியாத ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருப்பது சுயநலத்தின் முதிர்ச்சி ... எத்தனை பெரிய செல்வனானாலும் பழசை மறக்காத மனிதன் தன்னடக்கத்தின் முதிர்ச்சி ....!! இப்படி ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதத்தின் முதிர்ச்சி... ஆக..... வித்தியாசங்களின் முதிர்ச்சி தான் மனிதன்....

  ReplyDelete
 2. அழகான சொற் பிரயோகம் . மேலும் தொடர வாழ்த்துக்கள். மனிதனின் முதிர்ச்சி.ஒவ்வொரு வரும் ஒவ்வொரு வகை.

  ReplyDelete
 3. நாம் உடலாய் உணர்ந்தால் முதுமை !
  அன்பு செலுத்தி அறிவு கொண்டு ஆராய்ந்து
  மனம் உணர்ந்தால் --ஞா னம் .

  ReplyDelete

Post a Comment