உயர்வில்லை தாழ்வில்லை

உயர்வில்லை தாழ்வில்லை கண்ணே! - உலகில்
உயர்வில்லை தாழ்வில்லை கண்ணே!
அவரவர் பண்பினா லன்றி - யாரும்
உயர்வில்லை தாழ்வில்லை கண்ணே! (உயர்வில்லை)

உருவமும் வயதும் உயரமும் நிறமும்
பேசும் மொழியும் பிறந்த நாடும்
பாலினத் தோடு பண்பாடிவை
எதனைக் கொண்டும் யாருமிங்கே (உயர்வில்லை)

சாதி மத பேதங் களின்றி
சரிநிகர் சமமென வாழும்
நீதியை நாடி நீயும் நானும்
நிமிர்ந்து நடக்கையில் யாருமிங்கே (உயர்வில்லை)

நீயுமில்லை நானுமில்லை
இவருமில்லை அவருமில்லை
எவருமில்லை யாருமிங்கே
உயர்வில்லை தாழ்வில்லை கண்ணே! – உலகில் யாரும்
உயர்வில்லை தாழ்வில்லை கண்ணே! - ஆம்
உயர்வில்லை தாழ்வில்லை கண்ணே! - என்றும்
உயர்வில்லை தாழ்வில்லை கண்ணே ! (உயர்வில்லை)

1 comment:

  1. எழுத்தை பெரிதாக்கினால் நன்றியுடையவன் ஆவேன்.

    சிம்ப்ளி ஜூப்பரப்பு

    ReplyDelete

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...